Thursday 1 September 2016

குணமாக்குவது ஒரு கலை-பகுதி--9

வாடாமல்லிக்கு வனப்பும் வண்ணமும் உண்டு..ஆனால்வாசமில்லை....வாசமுள்ள மல்லிக்கு வாசமுண்டு ஆனால் வயது குறைவு ஆம்.சீக்கிரமே வாடி விடும்....
வீரமுள்ள கீரீக்கு கொம்பில்லை...கொம்புள்ள மானுக்கு வீரமில்லை....கருங்குயிலுக்குத் தோகையில்லை..தோகையுள்ள மயிலுக்கு இனிய குரலில்லை..  .காற்றுக்கு உருவமில்லை....கதிரவனுக்கு   நிழலில்லை....நீருக்கு நிறமில்லை....  நெருப்புக்கு ஈரமில்லை....  
ஒன்றை கொடுத்து ஒன்றை எடுத்தான்...
ஒவ்வொன்றிற்கும்...காரணம்..வைத்தான் எல்லாம் இருந்தும் எல்லாம் தெரிந்தும் கல்லாய் நின்றான் கடவுள்....புரிந்து கொள்ளவும்...அமைதிகொள்ளவும் தான் வேண்டும்....
படித்ததில் ...பிடித்தது...

தன்னை அறிந்தவன் ஆசைப்படமாட்டான் உலகை அறிந்தவன் கோப படமாட்டான்    இந்த இரண்டையும் உணர்தவன் துன்பப்படமாட்டான் .....பகவத் கீதை.

ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட தோற்பது எப்படி என்று யோசித்துபார்  நீ ஜெயித்து விடுவாய்...
                            ...ஹிட்லர்
விதைத்தவன்..உறங்கினாலும்
விதைகள் உறங்குவதில்லை.
                      ....காரல் மாக்ஸ்

..........படித்ததில் பிடித்தது................ 

ஐந்தாவது தத்தவம்...

உடலின் உள் உறுப்புகள்..
நுரையீரல,பெருங்குடல்

வெளி உணர் உறுப்புகள்..
மூக்கு..மற்றும் தோல்

உணர்ச்சிகள்...
துக்கம்

சுவை....
காரம்.

பஞ்சபூத தத்துவம்..
காற்று

உடலின் வெளி உணர் உ்றுப்பான மூக்கு மற்றும் தோலினைக்கொண்டு நுரையீரல் மற்றும்பெருங்குடல் குறைபாடுகளையும்
நோய்களையும் கூர்ந்து கவணித்தால்  புரிந்துவிடு்ம்..
அதிக துக்கம் நுரையீரல் ,உடலில் சக்தியை கிரகித்துகொள்ளும் பெருங்குடல்,மூக்கு மற்றும் தோல் பாதிப்படையும்...
காரச்சுவை இவ்வுறுப்புகளுக்கு சக்தியாக மாற்றி தரும் காரணிகள்ஆகும்...இச் சுவை குறைந்தால் சக்திகிடைக்காமல் உறுப்புகளில் பலவீனத்தை உணர்ந்து கொள்ள எளிதாகிறது..
பஞ்சபூத தத்துவமாக காற்று உள்ளது.
ஞ்சபூத அடிப்படையில் நமது உடலின் உறுப்புகள இயங்குவதை அறிந்து கொண்டோம்..பிரபஞ்தோடு நமது உடலும் உயிரும் எவ்வாறு இணைந்துள்ளதை தெளிவாக தெரிந்து கொண்டால் தான்  நோய்நாடி குணமாக்குதலை சிறப்பாக செய்ய முடியும்.

2 comments:

  1. அருமை. முத்து போன்ற வார்த்தைகள். பகிர்ந்ததற்கு நன்றி.

    ReplyDelete
  2. Very excited to read a homeopathy blog in Tamil. I am a novice homeopath, practising homeopathy in a small scale. Stumbled upon your blog. Please continue to share your wisdom and experience.

    ReplyDelete